நண்பனின் இறுதி உறக்கம் ...!!!

மீசை முளைத்த மடையனே,
பாதியிலே சென்றவனே!
வெற்றிடத்தை உண்டாக்கி -அதில்
வேதனையை உருவாக்கினாய் ..!

நான் எழுதிய பல கவிதைகளின் ரசிகன் நீ என்றாய் ..
இன்று என்னையே உன் இறப்பிற்கு
மடல் எழுத வைய்த்த கொடுமை ஏனோ ?

நீ நிச்சயம் ஒரு திறமைசாலிதான் -காரணம்
என் கண்ணீரின் அளவை சோதித்ததாலே ...!
உறக்கம் உனக்கு பிடிக்கும் என்றாய் -இப்படி
ஒரேடியாய் மண்ணில் உறங்கதானோ...?

நம் நண்பர் கூட்டம் அங்கு கதறுதடா -இன்னும்
ஏனோ இந்த இறுதி உறக்கம் ?
இன்னும் நாங்கள் அழுவதற்கு கண்ணில்
கண்ணீர் இல்லை ,குருதி மட்டுமே மிச்சம் ...!

இறப்பு என்பதே இனி வேண்டாமே ..
எழுந்து வா என் நண்பனே ..
எழுந்து வா ...!

-கார்த்திக் .

எழுதியவர் : கார்த்திக் (14-Sep-12, 10:41 am)
பார்வை : 290

மேலே