அனாதை என்னும் குறை, ஆண்டவனின் கறை...!
கண் இழந்த ஓவியன் வரைந்த ஓவியங்களோ..? இவர்கள், இல்லை காலங்கள் பதில் சொல்ல முடியா காவியங்களோ ...?
நீரின்றி பூத்த பூக்களோ இவர்கள் -இல்லை
இவ்வுலகின் வேரில்லா விழுதுகளோ ...?
இறைவனின் அமில மழையில் முளைத்து ,
ஆதரவற்று அல்லாடும் இவர்கள்
அனாதை மொட்டுக்களாம் ...!
வீதி தோறும் இறைவனின் இல்லங்கள் கோவில்களாக இருக்க,
இவர்களின் -கோட்டைகள் மட்டும்
அனாதை இல்லங்களாக மாறும் கொடுமை ஏனோ..?
இத்தனை குறைகளையும் சுமந்து,
இந்த பாவ மண்ணில் ...
ஆதரவின்றி அல்லாடும் இவர்கள் -இனி
அனாதைகள் அல்ல, ஆண்டவனின் கறைகள்....!!!
-கார்த்திக்.