நவீன காதல்....

விழிகள் இரண்டும் பேச ஒரு நாள்
நிழல் இரண்டும் உரச இருநாள்
விரள்கள் உரசி இணைந்தன மறு நாள்...

காதலி மடியில் கதிரவன் உறங்க செல்ல
மங்கை இவள் மயக்கம் கண்டு கரையை
முத்தமிட வந்த அலைகலும்
வெட்கமுடன் திரும்பி செல்ல....

இரவும் உறவும் உரசும் நேரம்
மலரும் மணமும் இணையும் நேரம்
மங்கை இவள் உறங்காமல் விழித்திருக்க
மன்னவனின் முத்தங்களை செவி ஓரம்
அலைபேசி ஏந்தி நிற்க....

கார்மேகதிடம் தன்னை இழக்கும்
வெண்னிலவாய் அவள்....

கூடலில் இன்பம் கானும் இருமனம்
ஊடலில் பிரியும் நண்பர்களாய்....

பிறிதலில் இன்பம் தரும் இந்த
உயிரில்லா காமம் தான் நவீவன காதலா.....

எழுதியவர் : (18-Sep-12, 12:01 am)
சேர்த்தது : kavinanbu
Tanglish : naveena kaadhal
பார்வை : 176

மேலே