நாங்கள் யாரு தெரியுமா ?

நாங்கள் என்னவோ
தண்ட சோறுகள்தான்
கௌரவமாகச் சொல்லிக்கொண்டால்
வேலையில்லாப் பட்டதாரி
நேர்முகத்தேர்வில்
அலுவலகத்தாருக்குத் தேவையானது
எங்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு தெரிந்தவைகள்
அலுவலகத்தாருக்கு தேவையில்லை
இதுதான் தேவை என ஒரு தடவையாவது
ஒருவருமே கூறியதில்லை,
நமக்கு முன்னால் சென்றவரும்
பின்னால் செல்பவரையும் கேட்டால்
கௌரவத்திற்காக பல பொய்கள் கூறியுள்ளனர் என
மறு தேர்வில் நாம் பயன்படுத்தும் போது தான் தெரிந்தது .
சரி புற தோரணைகளிலும்,
அக தோரணைகளிலும்,
மாற்றம் ஒன்றே மாறாதது
என மாறி விட்டோம் ,
இன்னமும் கைக்கெட்டவில்லை இலக்கு ,
தோல்வியே தொக்கி நிற்கிறது .
இரண்டாண்டு ,மூன்றாண்டு அனுபவம்
வேண்டும் என்கிறீரே !
வேலை கொடுத்தால் தானே
அனுபவம் கிடைக்கும்
இவ்வளவு நாள் நாங்கள் போட்ட அவதாரங்களே
சில அனுபவங்களை தந்தது ,
எங்கள் மூளை என்ற காகிதத்தில்
நாங்கள் குறித்து வைத்தவைகள் அது தான்
அன்று தான் உதவியது எங்களுக்கு ...
''எல்லாம் சரியாகக் கூறினாய்
அலுவலர்கள் மூலம் அழைப்பு வரும் ''
என கூறிய உதடுகளிடமிருந்து
அலைபேசி எண்ணை வாங்கவில்லை
இறுதியாக உறுதியான நம்பிக்கை தளர்ந்தது
அழைப்பு வராததால்
முன்பே ஆள் எடுக்கப்பட்டு விட்டது
இது கண்துடைப்பென்று அலுவலக நண்பர்
ஒருவரின்மூலமாக அறிந்தோம்
இப்படி ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு ஏமாற்றம்
நாங்கள் யாருக்குத்தேவை
எங்களை நாங்களே எப்படி விற்பது
என அறியாமல் அப்பாவிகளாக!
வேலை பார்க்கிறோம் என
அலுவலகத்தில் உறங்கிகொண்டிருக்கும் சிலரை விட
சும்மா இருக்கிறோம் என்ற பெயரில்
பல வேலைகளை செய்துகொண்டிருக்கும் நாங்கள்
எவ்வளவோ மேல்