சொர்க்கம்...நரகம் அவளேதான் ....

கர்ணன் என்று பேர்வைக்க தோன்றுகிறது
நீ வீதியைகடந்து செல்லும்
சிறு பொழுதுகளில் கூட...
ஐயோ... பாவம்
ஆயிரமாயிரம் கவியர்கள்
கவிவடித்த நிலவு
அமாவாசை புதருக்குள்
ஒழிந்து கொண்டதே -உன்
வருகையை அறிந்து...
விந்தைதான்
விண்மீன்கள் கூட பால்வீதியில்
வீறுநடை போடுகின்றன
உன்னை பார்பதற்கு...
பூக்கள் கூட
போட்டி போடமுடியாமல்
வெட்கி தலைகுனிந்து கொண்டன
உன் அழகுக்கு முன்னால்...
இதுவரை
அடங்காமல் வீசிப்போன காற்று
உன் ஆடையிடுக்கில் அகப்பட்டு
தென்றலாக மாறிப்போன
விந்தைஎனக்கு
விளங்கவில்லையே...
எந்த மடையன் கூறியது
சொர்கமும் நரகமும் விண்ணிலுள்ளதென்று..
கன்னியிவள் கடைவிளிபார்வைபட்டால் -சொர்க்கம்
பாராமல் கடந்து சென்றால் -நரகம்
ஆக மொத்தம் இரண்டுமே
இங்குதான்...