தமிழ்மொழிக்கு ஈடான மொழி.........
அவளிடம்
அழகாகச் சொன்னேன்.....
I LOVE U என..........
பிடிக்கவில்லை.
நீங்கள் சொன்னது....
போதும் நிறுத்துங்கள்...
அழுத்தமாக,
அழகிய
தமிழில்
சொல்லுங்கள்.....
"நான் உன்னை காதலிக்கிறேன்" என
அன்பான
தமிழ் வார்த்தையால்,
கொஞ்சியபடி
கொஞ்சி கொஞ்சி
ஆசையாக சொன்னாள்.......
சொன்ன வார்த்தை
அவள்
என்னையே
அணைத்துகொண்டு
சொன்னதுபோல் இருந்தது.......
அடடடா!!!!
இவளல்லவா
தமிழை
காக்க வந்த
தமிழ்மகள்....
தமிழோடு
என்னையும்
இதயத்தில்
சுமக்க வந்த தாய்மகள்....
உலகம்
எத்தனை மாற்றங்கள்
கண்டாலும்
உலகம் மட்டுமல்ல.....
உள்ளத்தின்
உணர்வுகளை
சொல்லகூட
என்
தாய்மொழியாம்..
தமிழ்மொழி...........
தமிழ்மொழிக்கு
ஈடான மொழி
வேறேனும்
இவ்வுலகில் உண்டோ!!!!!!!!!!!!!!!!!!!