%%% பெண்ணை ஆளும் பெண் %%%
அன்பை அளவற்றுப்
பொழிந்திடுவாள்
அன்னையுமல்ல !!
விட்டுக்கொடுப்பதையே
விதியாகக் கொள்வாள்
தியாகியுமல்ல !!
பக்குவமாய் பழகிடுவாள்
பகுத்தறிவோடு நடந்திடுவாள்
முதுமை கண்டவள் அல்ல !!
துணிவோடு கைகோர்த்து
துடிப்புடன் செயல்படுவாள்
சாதனையாளருமல்ல !!
தலை நிமிர்ந்த தன்னடக்கமாய்
தரணியிலே வாழ்ந்திடுவாள்
புதுமைப்பெண்ணும் அல்ல !!
பக்தியோடு இறைமையை
பவித்திரமாய் பணிந்திடுவாள்
சன்யாசியுமல்ல !!
பெண்மையை பறைசாற்றும்
பெருமையோடு நடையிடுவாள்
பெருந்தகையுமல்ல !!
அமைதியிலும் ஆற்றல்
அழகான போர்குணம்
புரட்சியாளருமல்ல !!
பொல்லாங்கு வெறுத்திடுவாள்
பொறாமை தவிர்த்திடுவாள்
மாணிக்கமுமல்ல !!
சகிப்புத்தன்மை சக்தியாலே
அனைத்தையுமே வென்றிடுவாள்
சகலகலா வள்ளியுமல்ல !!