தரை மீன்கள் கண்ணீர் !

ஏக்கங்கள் விழிகள் தாங்க
வருவேன் என்று சொல்லி
வராமலே போகும்
மீனவர் வாழ்கையில் ..!
ஆளும் அரசும்
அள்ளி கொடுக்குது
ஆறாத துன்பத்தை !

சிம்மாசனம் நீ இருந்து
சிரிப்போடு நிறைவேற்றும்
திர்மானகளை விழிமூடி
ஏற்க நாங்கள் என்ன
தலை இன்றி பிறந்த
மானிடரா ?

ஒரு முறை கட்டுமரமஏறு
மறுமுறை நீயே கொண்டுவா
சட்டங்களை ..!
முடியுமா உன்னால் ?

அணுவும் அழிக்கும்
எங்களை அறிந்தும் நீ
அழிக்க நினைக்கிறாயே
அழுகுரல் உனக்கு
விருப்பமா !
இரங்கல் சொல்லுவதுக்கு !

சுனாமி காவிய உயிர்களை !
கடலில் காற்றில் கரைந்த
துப்பாக்கியில் உதிரம் சுமந்த
இழப்புக்கள் போதாது என்றா
எங்கள் மண்ணில் அணு உலை !

மானிடம் மறுக்க மானிடா
நீ செய்யும் தவறுகள்
தண்டனை பெறும்
இறைவன் காலடியில் !

தாஸ்

எழுதியவர் : Thas (23-Sep-12, 11:10 pm)
சேர்த்தது : Thas
பார்வை : 195

மேலே