அச்சமூட்டும் ஓர் அந்தி நேரம்

அச்சமூட்டும் அந்தி நேரம்
ஆளில்லா அடர்ந்த காடு
அருகிலங்கு யாருமில்லை

சலசலகும் காற்று சத்தத்தில்
தேகம் திகிளிடவே
தீயாய் துடித்தேன் நான்

என்னேன்னவோ எண்ணங்கள்
என் உள்ளத்தில் பரிணமித்து
என்னை பயம் என்னும்
பாதாளத்தில் அழுத்தின

கல் அடித்த கண்ணாடியாய்
நொறுங்கியது என் நெஞ்சம்

கள்ளர் கூட்டம் கானகத்தே
உள்ளர் என்று உரைப்பார் பலர்!!
உருவமில்லா சித்தம் சில
ஊசலாடும் என்பார் சிலர்!!

சிறு ஒளியோன்று என்
இரு விழிகளில் தென்படவே
திகில்லிட்டது என் நெஞ்சம்

அருகிலொரு வுருவொன்று நெருங்கிடவே
அரும்பாய் அலறினேன் நான்!

அச்சமங்கு உருவெடுக்க அதில்
நித்தமாய் நித்திரை களைய
கண் விழித்து பார்த்தால்
"கண்டதெல்லாம் கனவு"

எழுதியவர் : Ramyaa (24-Sep-12, 11:21 am)
பார்வை : 185

மேலே