இருந்துகொண்டேதான் இருக்கிறது ...

எப்பவும் ஒருசொல்
இருந்துகொண்டேந்தான் இருக்கிறது!
வறுத்து எடுக்கும் நண்பர்களிடம் ,
"அப்பாகிட்ட மாட்டிகிட்டேண்ட..மச்சி .".
முரண்டு பிடிக்கும் டீன் ஏஜ் மகனிடம்
சாந்தமாய் சொல்லும் அப்பா...
"சம்பளம் வந்ததும் தருகிறேன்.."
மடி குழந்தையோடு வரும் தாய்..
புதிராய் பார்க்கும் முதல் பிள்ளை
"உன்கூட விளையாட தம்பி பாப்பா
கேட்டே இல்லே.".
சிரித்துக்கொண்டே சொல்லும் அப்பா,
காதலனுடன் கடலை போட்டுவிட்டு வரும் பெண்
தாய் தந்தையிடம் சலிப்புடன்.
"ஆபீஸ்ல எல்லா வேலையையும் ஏன் தலையில் தான் கட்டுறாங்க.."
கண்ணீருடன் பிரியும் காதலர்கள்..
"அடுத்த பிறவி யிலாவது ஒன்னு சேருவோம் "
தவிர்த்துவிட்டு ஹோட்டலுக்கு போய்
அதே நண்பனை சந்திக்கும்போது,
"நினைச்சேன் வந்துவிட்டாய்"
தெரிந்தும் சொல்வதற்கான
ஒரு பொய்யான சொல்லை
எல்லோரும் சுமந்து கொண்டேதான் இருக்கிறோம் !