சின்ன...சின்ன...வண்ணங்கள்....

கொலுசு...
பாதங்களின் உதடு
கால்களின் ஆரம்.
******************************************************
செருப்பு....
அரசாளலாம்...
போட்டுக் கொண்டவன்..
இராமனாய் இருந்தால் மட்டும்.
******************************************************
வெயில்...
பூமி பூசிக் கொண்ட வண்ணம்
என்றாலும்....ஏனோ...
காகத்தின் நிறத்தைக் கீழே தள்ளுகிறது
எதன் மேல் மோதினாலும்.
*****************************************************
கடிகாரம்....
ரோமானியன் காலத்திலிருந்தே...
இப்படித்தான் ஓடிக் கொண்டிருக்கிறது...
கால மாற்றத்திற்கு ஆட்படாமல்.
*******************************************************
பைத்தியம்....
இயல்பாய் பேசிக் கொண்டிருக்கிறது...
நான் வலிந்து கொண்ட மௌனத்தின் மேல்
தன் கேள்விக் குறியினைத் தொங்கவிட்டபடி.
**********************************************************

எழுதியவர் : rameshalam (24-Sep-12, 9:17 pm)
பார்வை : 162

மேலே