&&&&&&& இதுதான் வாழ்க்கை &&&&&&&
நிற்க நேரமில்லை
நிற்காமல் ஓடும் வாழ்க்கை
நிகரற்ற உறவாய் கைப்பேசி
சாவி கொடுத்தால்
ஆடிடும் பொம்மைகள்
கைகொட்டி சிரிக்கிறது
இயந்திரமாகிப் போன மனிதன்
உறவுகளின் உணர்வுகள்
உருவாக்கிடும் மாற்றங்கள்
உயிரோட்டமாய் கண்முன்னே
தொலைக்காட்சிகளின் சாதனை