போதுமடா மகனே அஞ்சாப்பு

"அம்மா"
என்று சொல்ல
ஐய்யாயிரம்
டொனேசன்...
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
"மம்மி"
என்று சொல்ல
ஐம்பதாயிரம்
டொனேசன்...
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
போதுமடா மகனே
நீ படித்த
அஞ்சாப்பு...!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
மம்மி யென்று
நான்
சொல்லித்தருகிறேன்
வா
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
நானும்
படித்திருக்கிறேன்
அந்த காலத்தில்
ஒன்னாப்பு....

அதோ
காமராஜர்
வருகிறார்
எல்.கே.ஜி. யிலே டிகிரி
முடித்துவிட்டு..
. . . . . . . . . . . . . . . . . . . . . . ..
ஒரு கணக்கு போடுகிறார்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
எல்.கே.ஜி.டிகிரி
இஸ்
ஈக்வல் ட்டு
பி.எஸ்.சி.டிகிரி
(L.K.G.டிகிரி=B.SCடிகிரி)
. . . . . . . . . . . . . . . . . . . . . . .

எழுதியவர் : ருத்ரா (25-Sep-12, 7:48 pm)
சேர்த்தது : ருத்ரா நாகன்
பார்வை : 187

மேலே