உன்னால் முடியும் தோழா ....!
தோழா !
உன்னால் முடியும்..
சாதியென்றும் மதங்களேன்றும்
சண்டையிட்டு நம்மை சமய வெறியனாக்கிய
சதிகாரக் கூட்டத்தை தகர்த்தெரிய
உன்னால் முடியும் தோழா.. !
நல்லாட்சி நல்லாட்சி என்று
நம்மையும் நாட்டையும் நாசமாக்கிய
நய வஞ்சகரை நசுக்கிட
உன்னால் முடியும் தோழா.. !
உழைப்பாளி உழைப்பாளி என்று பேசி
உழைப்பை உறுஞ்சி உடல் வளர்கும்
பதர்களை அழித்திட
உன்னால் முடியும் தோழா.. !
இன்று ஆறுதல் வார்த்தை கூற
ஒரு உதடு கூட இல்லையா ?
நாளை உறுதுயரம் உனக்கென்றால்
உடம்பனைத்தும் வாயாகக் கதறி அழ வைக்க
உன்னால் முடியும் தோழா.. !
உன்னுள் ஆயிரமாயிரம் திறமைகள்
ஒளிந்து கிடக்கின்றனவா ?
வெளிக் காட்ட வாய்ப்பில்லையா ?
சோர்ந்து கிடக்கிறாயா நீ ?
சோர்ந்து விடாதே ......
" வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால்
ஓடுவதில்லை " என்ற வரிகளை
மனதில் வையடா ...
சிலிரித்து நில்லடா ....!
ஐவர் குல விளக்காம் பாஞ்சாலி தனை
துரியோதனன் துகிலுரித்த காலம் போய்
இன்று என் நாட்டு கன்னியரின் கற்பை
கணினியில் விலை பேசும் நாய் பிழைப்பை
நசுக்கி கொன்றிட
உன்னால் முடியும் தோழா.. !
அதற்காக தோழனே .
"நீ ஆற்றும் கடமையை மறவாதே.,
புயல் காற்றுக்கும் மழைக்கும் தயங்காதே..
போற்றும் இதயங்கள் போற்றட்டுமே
பொறுமை இல்லாதோர் தூற்றட்டுமே " என்று
நீ வாழடா ....
எல்லாம் முடியுமே தோழனே உன்னால்....!