கவிதை
கவிதை
=========================ருத்ரா
உன் கூரிய பார்வை
எழுத்தாணியைக் கடன் தந்தது.
உன் கள்ள உள்ளமே
ஒரு பாட்டைக் கடன் தந்தது.
கண்ணீர் உவரிக்காட்டில்
பனைமரங்கள்
நட்டுவைத்தாய்
சுவடிகளுக்கு பஞ்சமில்லை.
தூக்கத்தை ஏன் திருடிக்கொண்டாய்
கனவு தானே
எழுத்துகள் ஏந்தி நிற்கும்.
பட்டுக்குஞ்சத்தின்
உன் துப்பட்டாவை கொஞ்சம் வீசு
அதில்
காளிதாசன் உதிர்ந்து கிடப்பான்.
நானும் கொஞ்சம்
அள்ளிக்கொள்வேன்.
===============================