காசை கரியாக்காதே
காசை கரியாக்காதே !
ஐந்துவயதில்
அப்பா சொன்ன
வேதமந்திரம் >
ஐம்பது வயதிலும்
நான் மீறவில்லை !
மரத்தை வெட்டி
கடத்தி எரித்து
கரியாக்கி
காசாக்கு கிறேன் !
காசைதானே கரியாக்க
கூடாது !
கரியை காசாக்க
கூடாது யென
அப்பா
சொல்லவில்லையே !