சிவப்பு விளக்கு
கண்ணீரில் இரத்தம் விழிந்து ஓடும் இடம் இது...
இரவில் மனிதனின் நிழால் துளைத்து
வேர்வை என்னும் மனித குளியல் நடக்கும் இடம் இது...
இங்கு இரவில் எரிவது நான் மட்டும் அல்ல ...
பகலில் அணைவதும் நான் மட்டும் அல்ல ...
அவள் அழுகையில், அவன் சிரிக்கும் ஓசை கேட்க்கும் தினம் தினம் இடம் இது ....
சில்லறையாக என்னபடும் நிமிடங்கள்...
சீர்இழந்தால் சீர் ஆட்டப்படும் அவள் தேகம்
பணம் என்னும் ககிதா ஆடையால்...
வெறும் வையிட்ரில் பசி என்னும் குயந்தையை சுமக்கிறாள் தினம் தினம் ....
உண்டவன்னுக்கு ஒரு இரவு மட்டும் தான்..
பசி தவலுக்கு தினம் தினம் இரவு தான் இங்கு...
வாசல் இருந்தும் வழி கிடையாது
உலகம் விடிந்தும் பகல் என்பது கிடையாது
மொழி தேரிந்தும் அவள் ஒரு உமை தான்
பரிமாறும் இலைக்கு இங்கு இது தான் மரியாதை....
இங்கு இரவில் எரிவது நான் மட்டும் அல்ல ...
பகலில் அணைவதும் நான் மட்டும் அல்ல ...
அவளின் வாழ்கையும் தான்...