என் ஊர்
அழகான நதிக்கரை ,
அதனையொட்டி
தென்றல் காற்றை தனக்கே சொந்தம் எனும்
தென்னத் தோப்பு..
வளமையை வெளிக் காட்டும் வாழை மரங்கள் ,
நன்செய் நிலங்கள் ,(நன்செய் பாளையம் )
உலகிற்கு உணவு தரும் நெற்பயிர்கள் ,
அதில் நீர் பாய்ச்சும் என் விவசாயி,
அருள் தரும் காளியம்மன் ஆலயம் ,
கோட்டை மதிற்சுவர் போன்ற என் ஊர் சுவர்கள் ,
அனைவரும் ஒரு கூட்டு பறவைகள் எனும்
வகையில் அமைந்த மாடி வீடுகள் குடிசை வீடுகள் ,
அதனை தாண்டி சென்றால்
உலகிற்கு அறிவியல் தந்த
'புல்லின் மேல் பனித் துளி ',
அதனை மேயும் ஆடுகள் ,
அதனை பராமரிக்கும் என்னூர் உழைப்பாழி
மானம் காக்கும் ஆடைகளை தரும்
பருத்தித் தோட்டங்கள்,
அதனையடுத்து
சோழக் பயிர்கள்
கதிரை கொத்தும் கிளிகள் ,
அதனை விரட்டும் என்னூர் முதியவர்
இன்னும் சென்றால்
கம்புப் பயிர்கள்
சொல்லிக் கொண்டே போகலாம்
வேரோன்றுமில்லை
இது என் அழகான சிற்றுர் ....
(நன்செய்பாளையம் ,தாராபுரம் )