சாலை தொழிலாளி

கொதிக்கும்
தார்கலவை
கொப்பளிக்கும்
சுடுவெயில்
காலிலே
காலனி இல்லை
கடும் வெயிலும்
பொருட்டில்லை

உழைகின்றான்
தொழிலாளி
ஒரு வேளை உணவுக்காக

ஆபத்தில் அவன் சிக்கி
அப்படியே விழுந்துவிட்டால்
அள்ளிக்கொள்ள யாருமில்லை
அனுதாபம் எங்குமில்லை

ஆண்டவனே தோழன்
ஆகாயமே கூரை
அதுதான் அவன் வாழக்கை

எழுதியவர் : (29-Sep-12, 8:48 am)
சேர்த்தது : m arun
பார்வை : 143

மேலே