அம்மா

அம்மா
பார்க்கும் இடமெல்லாம் நீ
பேசும் மொழி எல்லாம் நீ
என்னை போற்றும் உறவு நீ
என்னை வளர்த்தவள் நீ
அம்மா என்று அழைத்தவுடன்
என்னை அணைத்தவள் நீ
அம்மா
உன்னை பெற்றவள் நான்
வளர்த்தவள் நான் என்றாய்

என்னை குப்பைத் தொட்டியில்
எடுக்கப்பட்டவள் என்பதை ஏன் மறைத்தாய் ?

அன்னையே பிள்ளை இல்லை என்று
கோவில் கோவிலாக
சுற்றினாய்- துன்பங்கள் சூழ்ந்தன

குப்பைத் தொட்டியில் இருந்த என்னை
மாணிக்கம் என அணைதாயே ஏன்??

அம்மா உனக்கு நான் மாணிக்கம்
பெற்றவளோ என்னை
குப்பை என வீசிவிட்டாலே !!!

குப்பைத் தொட்டியில்
எத்தனை எத்தனை மாணிக்கங்கள்
இவர்கள் எல்லாம் நல்ல நிலையில் வளர்க்கப்படுவார்களா ??,.......
என்னை போல

பிள்ளைகள் வேண்டும் என
வரம் கேட்பவர்கள் சிலர் -ஆனால் '

கிடைத்த வரத்தை
தூக்கி எறிபவர்கள் பலபேர்

"வரம் " என்ற வார்த்தைக்கு
அர்த்தம் புரியாமல் போய்விட்டது

அன்னையே உன்னை போல் யாரும் இல்லை
இவ்வுலகில் ஈடு இணையாக

i love uuuuu அம்மா.................

எழுதியவர் : thenmozhi (29-Sep-12, 2:23 am)
சேர்த்தது : தேன்மொழி
Tanglish : amma
பார்வை : 123

மேலே