வானம்

வண்ண ஆடை உடுத்த விழை இல்லையோ,
வானவில்லை மட்டும் தீட்டிக் கொண்டாய்....
எண்ண முடியா விண்மீன் உன் பூமியிலே,
மனித கனவுகள் உதிக்கும் நேரத்திலே....

வான் மதியின் தளம் நீதானோ,
மேக வண்ணம் கருத்து நிலவொளிரச் செய்தாய்....
தேன் நிற ஆதவன் மனை நீதானோ,
தேக வண்ணம் தேய்ந்து கதிரொளிரச் செய்தாய்....

நிலவை விழுங்கி விட்டாய்,
தேயும் நாட்களில் அன்று....
ஏனோ,
அந்நிலைமை மாறச் செய்தாய்,
வளரும் நாட்களில் இன்று....

உன் தேகம் போர்த்திக் கொள்ளவே,
வான் மேகம் வேண்டிப் பெற்றாய்....
மாலை, மேகம் விலகும் வேளையிலே,
பெண்மை நாணம் கொண்டு சிவந்தாய்....

என்ன சோகம் கண்டாயோ....
கண்கள் ஏதும் இல்லாமல்,
பெண்ணைக் காதல் கொள்ளாமல்,
கண்ணீர் மழை மட்டும் பொழிவதேனோ....

இடி இடித்ததால் கண்ணீரோ,
மின்னல் அடித்ததால் கண்ணீரோ....
மின்னலும் இடியும் தனிந்த பின்பு,
தேம்பும் கண்ணீர் நீத்து தெளிந்து விட்டாய்....

பெண் குணம் கொண்டவள் நீ,
உன் அழகில் ஆணவம் கொண்டு விட்டாய்....
வானம் பார்க்கும் பூமி ஆகியும்,
கண்டும் காணாதது போல் நடித்துச் சென்றாய்....!!!!

எழுதியவர் : பிரதீப் (30-Sep-12, 10:08 am)
Tanglish : vaanam
பார்வை : 600

மேலே