முற்றுபுள்ளி

நம் உறவை கத்தரித்து விட
என்றோ ஒரு நாள் .........
காலன் குறுக்கிடுவான்
சந்தர்ப்பம் சமயம் பார்த்து தன்
கடமையை செய்யும்
அதற்கேற்ப
என்னை இப்போதே தயாரித்து கொள்ள
வேண்டும் என்றேன்னிருந்தேன் .
காலனுக்கும் வேலை வைக்காமல்
சந்தர்ப்பத்திற்கும் சமயம் தராமல்
நீயே இவ்வளவு அண்மையில்
விலகி விடுவாய் என நினைக்கவில்லை.
என் இயக்கமும் தொடங்கிய இடத்திலே.....
தொடராமலே முற்றுபுள்ளியாய்...