ஜன்னலை தட்டாதே (கல்லறை காதல் )

அது மழை காலமாக இருக்கலாம்
சாரல் உன்னை தொட்டு தொட்டு
முத்தமிட காத்திருக்கு
நீ
ஜன்னலை தட்டாதே

அது இலயுதிர்கலமாக இருக்கலாம்
உதிர்ந்த இலைகள் உன்னை கடைசியாக தழுவி செல்ல கார்த்திருக்கலாம்
நீ
ஜன்னலை தட்டாதே

அது பின்பனிக்கலாமாக இருக்கலாம்
கடைசியாக உன்னை கட்டி அனைத்து உருகி செல்ல காத்திருக்கலாம
நீ
ஜன்னலை தட்டாதே

சிலர் காத்திருக்கலாம்
நட்பு பாராட்டவும்
காதல் சொல்லவும்
தெரிந்தவர்களும்
அறிந்தவர்களும்
பிரிந்தவர்களும்
எல்லாருமே வெளியில் காத்து இருக்கலாம்
இறுதியாக உன்னை பார்த்துவிடவே

உன்னை அழைத்து கொள்ளவும் செய்துவிட்டால்

அப்போது

ஜன்னலை தட்டாதே
உன் கல்லறையில் பொருத்தப்பட்டு இருந்தால் !

எழுதியவர் : வேலு (1-Oct-12, 7:59 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 161

மேலே