சத்திய சோதனை

இது காந்தீய சிந்தனைக்கு
ஒரு சத்திய சோதனை
காந்தி வழி நடப்போருக்கு
முள் விரிந்த பாதை
மதுக் கடைகளில் போதையின் ஆலாபனை
மகாத்துமாவின் சிலைகளுக்கு
மலர்களால் ஆராதனை
ஜெய்ஹிந்த் என்று வணக்கம் சொல்வார்
பொய் விரிந்த வீதியெல்லாம்
வழி நடப்பார்
வேதனை கூட்டமடா வாய்ச் சொல் வீரரடா
சாத்தானும் இங்கே சத்தியம்
ஓதுதடா
----கவின் சாரலன்