வேண்டும் ஒரு பிள்ளை என்று வேண்டாத கோவில் இல்லை

கருவறை தொட்டிலை
கட்டி மட்டும் வைத்து விட்டு
பிள்ளை வரம் தராமல்
பின்னோக்கி சென்றுவிட்டான்
வேண்டும் ஒரு பிள்ளை என்று
வேண்டாத கோவில் இல்லை
வேண்டாத வார்த்தைகளில்
என்னை வஞ்சிக்காத ஆட்கள் இல்லை
ஆண்டுகள் பல கடந்தும்
அறிகுறிகள் ஏதும் இல்லை
பாவம் ஏதும் செய்யவில்லை
உன் பாதம் மட்டுமே வணங்கி வந்தேன்
என் கருவறையை நிரப்பிவிடு
இல்லாவிடில் என்னை கல்லறையில் அரைந்துவிடு
பிள்ளை வரம் வேண்டி கடவுளிடம் பெண் வருந்துவதை கவிதையாக்கினேன்
உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்