உயிரை கொன்று உணவாக உண்ணாதே

காளியம்மனுக்கு
கொடைவிழா
கட்டுகடங்கா கூட்டம்
காணும் இடமெல்லாம் !

அகண்ட ஒலிபெரிக்கியில்
அம்மன் பாட்டு
அழகான் பெண்களின்
முளைப்பாரி
ஊர்வலம்
நாட்டமையின்
பதவிசு
நம்மஊர் இளசுகளில்
காதல் பார்வை !

பலுன் பிடித்த
பொடுசுகள் !
பச்சரிசி
பொங்கல் வைக்கும்
பெரிசுகள் !
ஊர் தேடி வந்த உறவினர்
உற்சாகத்தில்
இருந்தனர் !

எல்லாம் சரிதான்
ஏனைய்யா
சாமிக்கு
சம்ர்பனமாக
குடம் குடமாக
சாராயம்
கொழுத்த கிடா
கோழி எல்லாம்
எதற்காக ?

எந்த சாமி
சாராயம் கேட்டது ?
ஆட்டு ரத்தத்தை
அப்படியே
அருந்தியது ?

உயிரை கொன்று
உணவாக் உண்ணாதே !
புத்தன் சொன்ன
போதிமொழி
புரியலையோ உனக்கு ?

எழுதியவர் : (3-Oct-12, 8:54 am)
சேர்த்தது : m arun
பார்வை : 163

மேலே