ஏன் என்று கேள் பதில் கிடைக்கும்

வெந்ததை தின்று தினம்
கந்தையை கட்டி
காலத்தை கழிக்கும் மனிதா |
காரணம் என்ன
கடுகளவு சிந்தித்தாயா?

வாழ்வது ஒருமுறை
வருமோ மறுமுறை ?
வாழுகின்ற காலமெல்லாம்
வறுமைதான்
உனக்கு வாழ்க்கையா ?
வாட்டத்தை போக்க
வழிதான் என்ன ?

ஆண்டவனின் படைப்பில்
அனைவரும் சமமென்றும்
ஏழை பாழை என்று
இங்கு எவருமில்லைஎன்று
அரசியல்வாதி பேசுகிறான்
அப்படியா நீ வாழ்கின்றாய் ?

புழுவுக்கும் போர்குணம்
உண்டு
புரிந்துகொள் மனிதா !
எங்கோ உன் வாழ்க்கை
எப்படியோ
தொலைந்துபோனது
ஏன்
எதற்கு என எண்ணமிடு !

கன்னம்வைத்து களவிட
வேண்டாம்
கடும் உழைப்புக்கு
காசுவர வேண்டாமா ?
எழுந்துவிடு தோழா !
ஏன் என்று கேள் !
எல்லாம் மாறிவிடும்
எதற்கும் பதில் கிடைக்கும்

எழுதியவர் : (3-Oct-12, 7:45 am)
பார்வை : 185

மேலே