கம்யுனிசம்
சிவப்பு துண்டு போட்டு
சித்தாந்தம்
பேசும் தோழா ?
கம்யுனிசம் என்பது
கட்சியல்ல ?
அது அறிவியல்
அகிலத்தை மாற்ற வந்த
அரும் மறை !
மட்டுமல்ல
மார்க்சும் ஏங்கல்சும்
எழுதிய உரை
உன் சிந்தனை
சிவப்பாக
இருக்க வேண்டும்
எல்லோருக்கும் எல்லாம்
ஏழ்மை என்பதில்லை
என்ற எழிய வழிதான்
கம்யுனிசம்
ஆனால்
தேர்தலுக்கே
கட்சி நடத்தி
ஓட்டுக்கு ஒவ்வாதாரடு ஒட்டிக்கொண்டு
கிச்சிந்தும் ஒவ்வாத
கருத்து பேசி
கட்சி வளர்பதா
கம்யுனிசம் ?