வட்ட வட்ட ஆசை

வட்ட வட்ட ஆசை
வைரமுத்து சொல்லாத ஆசை
கொட்ட கொட்ட பனியில்
கூத்தடிக்க ஆசை.
பட்டுடித்தி பெண்ணாகி
படம் பிடிக்க ஆசை
விட்டுப்போன சொந்தங்கள்
வீடு வர ஆசை.
கட்டபொம்மன் மீசை வைத்து
கடைத்தெரு போக ஆசை
வட்ட நிலா தட்டில்
சோறுன்னஆசை.
கடல் நீரில் நீந்தி
கண்டங்கள் சுற்றிவர ஆசை
உடல் முழுக்க தீயிட்டு
உயிர் பிழைக்க ஆசை
மின்னலை வைத்து
சமையல் செய்ய ஆசை
என்னவளை எப்போதும்
மறக்காதிருக்க ஆசை
வானத்து மேகங்களை
வளைத்துப் போடஆசை
வானவில்லை வீட்டுக்கு
கொண்டு வர ஆசை
செவ்வாயில் வீடு கட்டி
குடியேற ஆசை
செவ்வந்தி மாலையில்
சின்ன சிட்டாய் மாற ஆசை
ஆசைஇன்னா ஆசை
அவ்வளவு ஆசை
அத்தனையும் வைரமுத்து
சொல்லாமல் விட்ட ஆசை.