பயணம் ! (பணம் தேடி தூர தேச பயணம் )
கல்வி கற்ற காலங்களில் - நல்ல
கனவு கொண்டு கழித்து வந்தோம்
பொறுப்புகளை பெற்றவருக்கு - அன்று
சுமையாக ஏற்றி வைத்தோம்
வேலை கிடைத்து நல்ல வாழ்க்கை வாழ
அவர்கள் மனதில் தீராத கனவு
படித்து முடித்து பட்டங்கள் கிடைத்தும்
வேலை இல்லா இந்த சொந்த பூமி
அனுபவத்திற்கு முதல் இடம் என்றால்
படித்து முடித்தவன் நிலை பரிதாபம்
வேலை உண்டு பட்டம் பெற்றோம் - அனால்
காலி இல்லை கஷ்ட பட்டோம்
தூர தேச நாடுகளில் பண மதிப்பு கொண்டு
திறமைக்கு ஏத்த நல்ல வேலையும் உண்டு
தூர தேச பயணம் இது
பணம் தேடி இன்னும் கடல் தாண்டி ............
முடிவில்லா பயணம் இது
வாழ்வின் நிலையை மாற்றுவது !
ஸ்ரீவை. காதர்