வண்ணம் தொலைத்த மத்தாப் பூக்கள்

பசியை படைத்தாய் இறைவா - என்
படிப்பை கொல்லுதல் முறையோ ?

கலைமகளே ஒரு பொழுது நீ
கடும்பட்டினி இருந்து பாரு..........!

கைவிரல் வீணை மீட்டுமோ ? இல்லை
கல்வி ஏட்டைத்தான் சுமக்குமோ ?

கல்வி தாகம் தீர்பதற்கு
காசுபணம் எங்கிருக்கு ?

சாப்பாட்டுக்கே வழி இல்லை
வாய்ப்பாடு ஒரு கேடா ?

கண் வலி அது தாங்கலியே
கை விரல் எரிச்சல் தீரலியே......!

அடிக்கிறான் சுளீரென் முதுகில்
அன்பில்லாத முதலாளி

அதுவே ஒரு வாத்தியார் அடி எனில்
அறிவாளியாய் உயர்ந்திருப்பேனே......!

இதோ பிடரியை பிடித்து இழுக்கிறேன்
இங்கே என்ன வேடிக்கை என்று......

இன்னும் இருக்கிறது
மத்தாப்பூ பெட்டி முடிக்க முன்னூறு........!

எழுதியவர் : (5-Oct-12, 11:46 pm)
பார்வை : 255

மேலே