இதழ்கள் கிழிந்த மலர்கள்

ஓலைக் குடிசைக் குள்ளே
ஒத்த கோழிக் குஞ்சி போலே
ஒலகம் புரியாம நானு
ஒய்யாரமா தூங்கி இருக்க....

அம்மா அப்பா வேலையாக
ஆறு வயசில் என்னை
அந்த வீட்டில் உட்டுப் புட்டு
அகண்ட தூரம்தான் போயிட்டாக போயிட்டாக....!

நாயில்லே நரியில்லே
நம்ம மனுஷ சாதிதான்
அறுவது வயசு கிழடு ஒன்னு எனது
ஆறு வயது பருவம் சிதைத்தது.............

கழுத்தை நெரிக்காமல் தூக்கு
சுருக்கு போடாமல்
ஐயஹோ மூச்சு முட்டி
அப்படியே செத்தேன்...நானு ..........!

பதட்டத்தில் கண்விழித்துப் பார்த்தேன்......!

நல்ல வேளை கதவு இன்னும்
பூட்டப் பட்டுதான் இருந்தது.......!

இது ஒரு கெட்ட கனவு.........!

இது இனி எந்த குழந்தைக்கும் நடக்கக் கூடாது...!

எழுதியவர் : (6-Oct-12, 12:03 am)
பார்வை : 188

மேலே