விழித்துக் கொள்! பெண்ணே விழித்துக் கொள்!
உணர்வுகளோடு விளையாட
பெண்ணே விழித்துக் கொள்
உரிமைக்காக போராட
பெண்ணே விழித்துக் கொள்
சமூக கொடுமைகளை அழிக்க
பெண்ணே விழித்துக் கொள்
உனக்காக மட்டும் தான்
வானமும் பூமியும் -நீ
பிறந்த பலனை அடைய
பெண்ணே விழித்துக் கொள்
சமூக கொடுமைகளை
தீயாக ஏற்றி
உரிமைகளை தீப்பந்தங்களாக பிடித்து
உண்மைக்காக உரிமையோடு
போராட விழித்துக் கொள்
பெண்ணே விழித்துக் கொள்