ஏழை தாயின் ஏக்கம்
ஆரிரோ பாடி நான்
அழும் குழந்தையை
தாலாட்ட நினைக்கிறன்
தடவி விட விளைகின்றேன் !
ஆனால்
ஆடுத்துவரும்
நினைவுகளால்
அழது புரளட்டும் மென
அப்படியே
விட்டு விட்டேன் !
அழுத குழந்தையை
பசியாற வைப்பதற்கு
ஆவின் விலை கேட்டால் ?
அதன் விலையோ எனக்கே
அழுகைவர வைத்தது !
அரிசிகஞ்சி கொடுத்தாவது
அழுகையை நிறுத்தவோ
ஆழாக்கு வாங்கக்கூட
தகுதி இல்லை எனக்கு !
கழுத்தில் தாலிகூட
தங்கம் இல்லை எனக்கு - இதில்
கடன் கேட்டால்
உடனதர ஒட்டுமில்லை
உறவும் இ ல்லை
இங்கே எனக்கு !
உழைக்க போன என்கணவன்
உணர்வின்றி
கிடக்கின்றான்
கிடைக்கும் பணம்
அத்தனையும்
மதுவருந்தி
மாய்கின்றான்
விதைப்பதுக்கு
நெல்கூட
வீட்டில் இல்லை
விற்க ஒரு
பொருளில்லா
விதிதான் எனக்கு
இதில் அழும்
குழந்தையை
தாலாட்டி
ஆசை காட்ட
முடியலையே !
ஆண்டவனே காப்பாற்று
என
அழகூட தெரியலையே !
ஏழையாய்
பிறந்தது
எந்தப்பு இல்லை
ஏழைக்கு யொரு
மகளாய் வந்தது
உன்தப்பும் இல்லை !
மரம் வைத்து
நீர் ஊத்த
மனிதர் இங்கு இல்லை!
மாறிடும் வாழ்கை
என்ற
நம்பிக்கைதான்
எனக்கு உனக்கும்
எப்போதும் எல்லை 1