கல்நெஞ்சக்காரி

கனவிலும் கூட
என் காதலை ஏற்க மறுத்த நீ
கல்நெஞ்சம் கொண்ட கடவுள் போலத்தான்!!!
உனது பெயரை மட்டுமே
உச்சரித்துக்கொண்டு இங்கும் அங்குமாய் அலையும் நான்
உன்னுடைய தீவிர பக்தன் போலத்தான்!!!
நீ குடியிருக்கும் கோயிலில் வந்து
கூப்பாடு போட்டிருந்தாலாவது
உனது கருணை கிட்டியிருந்திருக்கும்!!!
ஆனால், நான் இருப்பதோ மனநல மருத்துவமனை ஆயிற்றே!!!