இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாழ்த்து கவிதைகள் வந்து விழுந்திட
வண்ணக் கனவுகள் பொங்கி எழுந்திட!
மண்ணில் பிறந்த இந்நாள்
மறக்க முடியா பொன்நாள்!
இதயம் எங்கும் இன்ப வெள்ளம்
இதர இடர்கள் விலகி செல்லும்!
உண்மை சொல்லும் உந்தன் உள்ளம்
ஒருநாள் இந்த உலகம் வெல்லும்!
நீ கண்ட கனவுகள்
கனிந்திடும் தன்னால்!
பிறர் கொண்ட கவலைகள்
கரைந்திடனும் உன்னால்!
பெற்றோருக்குப் பெருமையும்
உற்றாருக்கு உரிமையும்
மற்றோருக்கு நேர்மையும்
தந்து
புதிரான வாழ்வை
புரிதலோடு அணுகி
புனையாப் புகழ் பெற்று
அணையா ஒளி வீசிட
வாழ்த்துகிறோம்.......