வேலை தேடும் வாலிபன்
அரசாங்க அலுவலகத்தில் வெற்றிடமாம்
தேவைபட்டார்கள் பட்டதாரிகள்;
வியாபார சந்தையான வேலை வாய்ப்பு திட்டத்தில்
மடிந்தது அறிவாளிகள் மட்டுமே;
மந்திரியின் மருமகனா?
பஞ்சாயத்து தலைவரின் பங்காளியா?
இல்லை ஜமீன்தாரின் வாரிசா?
வாரிக் கொடுக்கிறான் வேலையை;
வேதனை விளிம்பில் வாழ்க்கை பசியில்,
வயதை கறைத்து நாட்களை தொலைத்து
வேலை தேடும் வாலிபனுக்கு
விடை கொடுக்குமா இக்கலிகாலம்??
இல்லை வேதனையாவது மிஞ்சட்டும்,
தேடலாவது தொடரட்டும் என்று
வெற்றியின் தூரத்தை
சற்றே தள்ளி வைத்ததா சமுதாயம்;
வழக்கம் போல் தான் வாழ்க்கையா?
வித்தியாசம் தான் இல்லையா?
வேதனை மட்டுமே சொந்தமா?
விதியை என் மதி வெல்லுமா?
கனவுகள் கைதிகளாய்,
பொறுப்புகள் பொதிமூட்டையாய்,
பார்க்கும் அவலம் எனக்கு ஏன் வந்ததோ!
காத்திருக்கிறேன்;
வெற்றிடத்தின் பாதையில் வெற்றியின் வாசத்தை சுவாசிக்க;
காத்திருக்கிறேன்;
என் வாழ்க்கையை நான் வாழ்ந்து தான் பார்க்க!!
என் வாழ்க்கையை நான் வாழ்ந்து தான் பார்க்க!!