மாண்ட காதல்
பகல்கள் பல தோன்றினாலும்
இருளில் தவழும் எனது நாட்கள்.
தன் சுவைக்கு அடிமைப்படுத்தும்
கள்ளமில்லா எனது கண்ணீர்த்துளிகள்.
என்னுள் பேசிய காதல் கவிதைகள்
மொழியற்றுத் தவிக்கிறது அவனால் இன்று.
காதலின் அர்த்தம் கற்றுத் தந்தவனே
அதனை மரணப் படுக்கையில் இட்டுச் சென்றான்.
மறிக்கச் செய்த என் காதலின் இறுதிச்சடங்கில்
கலந்தும் கொள்கிறான்.