ஆங்கில வாடை

ஒருவார விடுப்பில்
இளைப்பாற
இந்தியா வந்தபோது
என் மீது
ஆங்கில வாடை
அடிக்க வேண்டுமென்றே
எதிர்பட்டவரிடம்
எதார்த்தமாக
என் அயல்நாட்டு வாழ்க்கை குறித்து
பேசி தீர்த்தேன்.

என் வீட்டு சுவற்றில்
ஒட்டியிருந்த சுவரொட்டியை
கிழித்தெறிய முற்படுகையில்
பிழையின்றி வசிக்க முடியவில்லை
எங்கள்
தமிழ் அய்யாவின்
முதலாமாண்டு
கண்ணீர் அஞ்சலி.

---- தமிழ்தாசன் ----

எழுதியவர் : தமிழ்தாசன் (7-Oct-12, 5:00 pm)
Tanglish : aangila vaadai
பார்வை : 175

மேலே