உன்னையே பார்த்தேன்
![](https://eluthu.com/images/loading.gif)
உன் பேச்சில்
தந்தையைப் பார்த்தேன்.
உன் அன்பில்
தாயைப் பார்த்தேன்.
உன் அறவனைப்பில்
நன்பணைப் பார்த்தேன்.
உன் வழிகாட்டலில்
ஆசிரியரைப் பார்த்தேன்.
உன் தோற்றத்தில்
கடவுளைப் பார்த்தேன்.
உன் தேடலில்
குழந்தையைப் பார்த்தேன்.
உன் அழுகையில்
ஆதரவட்றோரைப் பார்த்தேன்.
உன் தோல்வியில்
விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையைப் பார்த்தேன்.
உன் பார்வையில்
உலகைப் பார்த்தேன்.
உன் நடையில்
உலக முன்னேற்றத்தைப் பார்த்தேன்.
உன் இயலாமையில்
சோம்பேறியைப் பார்த்தேன்.
உன் அனுதாபத்தில்
மக்களைப் பார்த்தேன்.
உன் உதவியில்
உறவினர்களைப் பார்த்தேன்.
உன் குணத்தில்
என்னைப் பார்த்தேன்.
உன் சோகத்தில்
நம்பிக்கை இழந்தோனைப் பார்த்தேன்.
உன் அதிகாரத்தில்
அரசியல்வாதியைப் பார்த்தேன்.
உன் ஆணவத்தில்
பெண்மையைப் பார்த்தேன்.
உன் எழுத்தில்
உண்மையைப் பார்த்தேன்.
உன் இறப்பில்
வாழ்க்கையைப் பார்த்தேன்.
உன் வெட்கத்தில் நான்
“உன்னையே பார்த்தேன்”...
MG.விண்ணரசன்...