@@ நாகரீகக் கோமாளிகளின் ஆடை அலங்காரம் @@
நாகரீகம் என்று
நாள்தோறும் ஒவ்வொன்றாய்
நடைமுறைப்படுத்த
தயங்காமல் மக்களும்
தடையின்றி பின்பற்றி
தன் நிலை மறந்து
கலாச்சார சீரழிவிற்கு
கலக்கமின்றி துணிந்து
கலியுகவாதிகளாய்
அநாகரீகமாய்
அடியெடுத்து வைக்கும்
அவலம் இங்கே
கண்கள் உறுத்த
கவலையும் சூழ -இதை
நான் போய் சொல்வது எங்கே