முதல் பார்வை !

மனம் தேடிய உறவு
கண்கள் பார்த்து நின்றது !
உன் நெருக்கம்
வியர்வை துளிகள் தந்தது!
உன் இரு விழிகள்
ஒரு நொடியில் இணைந்தது !
என் வெட்கம் தீண்டிய
உன் வார்த்தை
என் இதழ்களில்
புன்னகை பூத்தது !
காற்றில் அசைந்த ஆடை கூட
காதல் பேசியது !
பிரிந்து போக
மனம் இல்லாததால்
நேரம் கூட
எதிரி ஆனது !
நம்மை சுற்றிய கூட்டம் கூட
சொந்தம் போல் தெரிந்தது !
கண்கள் கண்ட கனவு எல்லாம்
உன் முதல் பார்வை போல்
இனிக்கிறது !

எழுதியவர் : ஷெரில் (10-Oct-12, 3:17 pm)
பார்வை : 302

மேலே