!!!====(((நீ எங்கிருந்தாய்???)))====!!!

எம் மக்கள்
கொத்து கொத்தாக
கொன்று புதைக்கபட்டபொழுது - நீ
என்ன செய்துகொண்டு இருந்தாய்...?
ஒதுங்கி நின்று
வேடிக்கை பார்த்துகொண்டு
இருந்தாயோ...?
எம்மக்கள்
கடவுளே... கடவுளே...
என்று கதறினார்களே
கண்ணீர் வறண்டு துடித்தார்களே..
அப்பொழுது நீ
என்ன செய்துகொண்டு இருந்தாய்...?
மயிலிறகெடுத்து காது
குடைந்துகொண்டு இருந்தாயோ...?
எம் சகோதரிகள்
கற்பை இழந்து
உறுப்பு சிதைந்து
கொடூரமாய் கொன்று
சிதைக்கப்பட்டார்களே...
அப்பொழுது நீ எங்கிருந்தாய்...?
அந்த பரமேஸ்வரியோடு
காம களியாட்டம்
புரிந்துகொண்டு இருந்தாயோ...?
எம் தாய்மார்கள்
மார்பகங்கள் அறுக்கப்பட்டு
மாண்டு கிடந்தார்களே...
எம் குழந்தைகள்
பாலுக்கழுது பசியில் செத்தார்களே...
அப்பொழுது நீ எங்கிருந்தாய்...?
பாற்கடலில் அமுதம்
பருகிக்கொண்டு இருந்தாயோ...?
ஈவு இரக்கமின்றி
காக்கை குருவிகளைப்போல்
எம் சகோதரர்கள்
சுட்டு கொல்லப்பட்டார்களே...
அப்பொழுது நீ எங்கிருந்தாய்...?
துப்பாக்கி ரவையில்
தூங்கிகொண்டு இருந்தாயோ...?
எம் சொந்தங்கள்
உண்ண உணவின்றி
பசியில் கிடந்து
பட்டினியில் மரித்தார்களே...
அப்பொழுது நீ எங்கிருந்தாய்...?
பாலபிஷேகத்திலும் நெய்யபிஷேகத்திலும்
நனைந்துகொண்டு இருந்தாயோ...?
எம் உறவுகள்
தலைகள் அறுக்கப்பட்டு
ரத்தத்தில் மாண்டு கிடந்தார்களே...
அப்பொழுது நீ எங்கிருந்தாய்...?
அந்த ரத்த வெள்ளத்தில்
நீராடி மகிழ்ந்துகொண்டு இருந்தாயோ...?
உன்னையே நம்பி வாழ்ந்தவர்கள்
தனது உயிரின் கடைசித்துடிப்பிலும்
உன்னைத்தானே அழைத்தார்கள்...
அப்பொழுது நீ எங்கிருந்தாய்...?
பூமாலைகள் சூடிக்கொண்டு
பூஜையில் அமர்ந்து இருந்தாயோ...?
எங்கிருந்தாய் ஏசுவே...
எங்கிருந்தாய்...?
எங்கிருந்தாய் நபிகளே...
எங்கிருந்தாய்...?
எங்கிருந்தாய் கடவுளே...
எங்கிருந்தாய்...?
சொல்லடா இரக்கமற்றவனே நீ
எங்கிருந்தாய்...? இப்பொழுது
எங்கிருக்கிறாய்...???
உன்
இருப்பிடத்தை மட்டும் சொல்
என் கேள்வி நெருப்புகளைகொண்டே
உன்னை எரித்துவிடுகிறேன்...!!!