உன் நினைவுகளில் சில நிமிடம்
கோடி நட்சத்திரம்
கொடுத்து வைத்த இரவு
படுத்துக்கொள்ள உன் மடி
பார்த்துக்கொள்ள இரு கண்கள்
மார்கழி காலை
குளிர் நடுக்கத்தில்
கூவ மறந்த சேவல்
ஜன்னல் ஓரம் வந்து படர்ந்த
உன் ஞாபகங்கள்
நேற்றைய செய்திதாள்
விட்டுப்போன சில பக்கம்
தொடர்ந்து படிக்க அருகில் இருந்தும்
நாம் பேசாமல் போன சில வார்த்தைகள்
பேருந்து பயணம்
ஜன்னல் கம்பிகளுக்கு இடையே
நகர்ந்து போன
நம் காதல் நிமிடங்கள்
அலைபேசி அழைப்பில்
மயங்கிய பொழுதுகள்
ஒவ்வொரு அழைப்பிலும்
உன் குரலின் மெல்லிய தழுவல்
மரத்தடியில்
வரைந்த உன் முகம்
வெயில் விழும் போது
நிழலாய் நானும் மரமும்
வானவில்லை வரைந்த
மேக கூட்டம் கலைந்தும்
துண்டு துண்டாய்
சிதறி கிடந்த வானவில்லாய்
நமக்கான பிரிவு
காற்றோட்டம் இல்லா தனிமை
சுவாசிக்க மூச்சு காற்று
அனுப்பியபடி உன் நினைவுகள்
காதல்
நமது கடந்த காலம்
அதன் நினைவுகள்
இது நிகழ் காலம்
எதிர்காலம் வேண்டாம்
தினம் மீண்டும் மீண்டும்
நினைவுகளை தூசி தட்டிய படி நான்...