இடமாறும் பூக்கள்
மண்ணில் சிரிக்கும்
மலர்களைக் கண்டு
மகிழ்ந்தாடியது
குழந்தைப் பருவம்
கன்னிப்பருவம்
அழைத்துச் சென்று
கழுத்தில் மாலையாக்கியது
அந்த மலர்களை
தாலாட்டும்பாடும் முன்னே
தாயாகும் - இவளை வரவேற்க
பூவோடும் நாறும்
பூத்திருந்தது !
வாழ்வின் இறுதி நாளை
வழியனுப்பி
வனப்புடம் காத்திருந்ததும்
அந்த - பூக்கள் தான்
பூவே - உன்னை
வழியனுப்ப - அந்த
தென்றலும்
திசைமாறி விடுமோ ?
Dr.ம.பாரதிநாதன்...