இலையுதிர் காலத்து மரம்...நான்.

என்னைக் குறித்தான
அக்கறை
எப்போதும் இருந்ததில்லை....
உனக்கு.

நான் எப்போதும்
உனது தேவைகளுக்கானவள்.

எனது எல்லா உணர்வுகளும்
உனது உதடுகளிலிருந்து....
உதிர்க்கப்படும் சாம்பலென...
உதறப்பட்டவை.

உன்னைப் பகிர்ந்து கொண்டதில்லை
நீ இதுவரை என்னிடம்.

வெறும் இலையுதிர்காலத்து மரம்
என நான்.

வடியும் எனது கண்ணீரில்....
கரைந்து வருகிறது...நமது
நேற்றும்...இன்றும்...நாளையும்.

என்னைக் கடக்கும் ....
பகலிலும் இரவிலும்....
வாழ்ந்து சாகிறேன்....
என்றாலும்....
வாழ்கிறேன்
ஒரு மின்னலின் கணம்....

உனது முதல் பார்வையின்
முதல் காதல்
என்னை வடியும் நினைவுகளால் ...
ஒற்றி எடுக்கையில்.

எழுதியவர் : rameshalam (12-Oct-12, 7:38 pm)
சேர்த்தது : rameshalam
பார்வை : 224

மேலே