[350 ] குறுகுறுப் பாக்கள் (016 )

புள்ளிகளாய் நிற்கும்
பெண்டிரைச் சுற்றி விட்டுப்
புறப்பட்ட இடத்துக்கே
வந்து சேரும் கோடுபோல்
வீடு சேர்வேன்..
இதுதான்
இளமைக் கோலமோ?
!!!!!!!!!!!!!!!xx!!!!!!!!!!!!!xx!!!!!!!!!!!!
பல அபஸ்வரங்கள்
கூட்டாக
இசைக்கப் பட்டுவிட்டால்
அது குடும்பமென்னும்
கச்சேரி ஆகிவிடுமா..?
!!!!!!!!!!!!!!!!!!!!xxx!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பெண்ணே!
உன் பேச்சை யாரும்
கேட்பதில்லை என்றா வருந்துகிறாய்!
நீ எது வேண்டுமானாலும்
பேசிக்கொள்ளலாம்
யாரும் கேட்கப் போவதில்லை என்பது
உனக்குக் கொடுக்கப்பட்ட
சுதந்திரம்..!
!!!!!!!!!!!!!!! x !!!!!!!!!!!!!! x !!!!!!!!!!!!!!!!!!!
வாழ்க்கை என்பது
ஒரு
கூட்டுக் கொள்ளை முயற்சி !
ஒருவரை ஒருவர்
கொள்ளையடித்துக்கொள்ள வேண்டும்
ஒருவருக்கும் தெரியாமல்..!
!!!!!!!!!!!!!!!!!! x !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (14-Oct-12, 6:30 am)
பார்வை : 112

மேலே