மனைவி

பிரசவத்தில் நீ உடல்வருந்தி
உயிர்பெற்றதே அதிசயமென்று
மருத்துவர் சொல்லிசெல்ல
இறைவனுக்கு நன்றிசொல்லி
அக்களத்தை கண்ணீரால் கரைத்து
எம்முயிரை கையிலேந்தி
உன்னை நான் பார்க்கவந்தேன்
கண்களோரம் கண்ணீர் கசிய
உதடுதனில் புன்னகையுடன்
கண்களால் சைகைக்காட்டி
எப்படி நம் குழந்தை என்றாய்
தூளியிலாடும் சேயைப்பார்த்து
நான்கண்டேன் இருசேய்களை
குழந்தையாய் தோளில்சாய்ந்த
மறுகுழந்தை நீதான் என்னன்பே..!!

எழுதியவர் : சிவா(எ)விஜய் (14-Oct-12, 6:30 pm)
பார்வை : 224

மேலே