கால்வயிறு கஞ்சிக்காக

வெய்யோன் உதிக்கா காலைவேளை
தென்றல் வீசும் கருமைக் காலை
சேற்று வாசம் செம்மையாய் வீசி
வரவேர்க்கும் எங்களை வாசத்துடன்
கிழிந்த சேலை இடுப்பில் தங்க
வாளி சோறு கையில் தொங்க.
நடந்து சென்றோம் வயல்வெளியில்
நாங்கள் நடுகின்ற வயல்நாற்று
நாளை நெல்மணி நிறைதரவேண்டி
குன்றா மழை குறைவின்றி பெய்ய
வருணனுக்கு வணக்கம் சொன்னோம்
வெளிச்சம் தந்து அனைத்துயிர் காக்கும்
வெய்யோனை வணக்கம் செய்தோம்
எங்கள் அன்னை நிலமகள் தனக்கு
பச்சை கம்பள போர்வை நெய்ய
கட்டிய நாற்றினை கையிலெடுத்து
கழனியில் கால்வைத்ததோம் நாற்றுநட
பாடல் பல பாடி களைப்பினை மறந்தோம்
தினமும் வயலில் வேலை செய்ய
இழந்த சக்தியை பெறவேண்டி
கால்வயிறு கஞ்சியுண்டோம்
சோர்வுடன் சேர்த்து பசிமறந்தோம்.

எழுதியவர் : சிவா(எ)விஜய் (14-Oct-12, 9:21 pm)
பார்வை : 199

மேலே