**... (( மூன்றெழுத்து கிருமி தாக்கி என் தலையெழுத்து மாறியதே ))....**
என்னவென்று சொல்வதடா
என்னை என்னவென்று சொல்வதடா
தினம் தினம் பல
சுகம் கண்டேன்
இன்று என் உயிர் காக்க
தவம் கொண்டேன்
பலரின் ஆசைகளுக்கு
இறையானவள் நான்
இன்று மண்ணுக்கு இறையாகும்
காலம் இதோ
அப்பொழுதெல்லாம் கண்ட சுகங்களில்
இப்பொழுது தான் காண்கிறேன் பல சோகங்களை
காற்று மேகத்தை துரத்தியது
காமம் என்னை துரத்தியது
காற்றுக்கு மேகம் சிக்கவில்லை - ஆனால்
நான் காமத்தில் சிக்கிவிட்டேன்
அந்த கடவுள் தந்த உணர்வுகள்
அதனால் என் காமத்தவறுகள்
இளமையின் தாகமெல்லாம் தீர்ந்தது
இன்று நோயுள்ள என் தேகம் மட்டுமே மீந்தது
ரத்தம் கொடுக்க கூட தகுதியில்லை
சத்தம் போட்டு கூட அழ முடியவில்லை
அடக்கி வாழ்திருந்தால் பெண்ணாகியிருப்பேன்
அலைந்து திரிந்ததால் மண்ணுக்கு இரையாகின்றேன்
இனி என் தேகத்துக்கு விலை இல்லை
நான் இன்ப பாதையில் செல்ல வழி இல்லை
மூன்றேழுத்து கிருமி தாக்கி
என் தலைஎழுத்து மாறியதே
என் வாழ்க்கை இருளில் மூழ்கியதே
எச்.ஐ.வி-யால் பதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை என் மனதில் தோன்றியதை கவிதையாக்கினேன்
கருத்துக்களை பகிந்துகொள்ளுங்கள்
தமிழ் பக்தன் ************** ராஜ்கமல் **************